முதல் பாடல்....
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
Sunday, 2 March 2008
Friday, 4 January 2008
திருமந்திரம்
திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது.மூவாயிரம் பாடல்களை உடையது.
'மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது'
என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம்.
வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது.மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது.சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இத்திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம். தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.

சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,
ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான்,ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன்,ஏழும்பர்ச்
சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2
என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார்.

இந்தப் பதிவில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை விளக்க முற்பட்டுள்ளேன். நான் இங்கு கொடுத்துள்ள விள்க்கங்கள் பல வலைப்பக்கங்களில் இருந்து தொகுத்தவை.
Tuesday, 25 December 2007
Subscribe to:
Posts (Atom)